
ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வளர்ந்து வரும் வீரர்களாக இந்தியா சார்பில் திலக் வர்மா தலைமையில் அணிகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் அணியில் திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா போன்ற சிறந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைமை பொறுப்பில் உள்ள ஹாரிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாகிஸ்தான் அணியில் இந்தியா என்ற வார்த்தையே இடம்பெறாது. எங்களது அணியில் இந்தியா என சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்த போட்டியானாலும் இந்தியா என சொல்வது அதிக மன உளைச்சலை உண்டாக்குகிறது. அதனால் இந்தியாவைப் பற்றி பேசுவதை தவிர்க்கிறோம். இந்தியாவை போன்ற எல்லா அணிகளையும் ஒன்றாக கருதுகிறோம். எனவே எல்லா அணிகளையும் வெற்றி பெற வேண்டும் இந்தியாவை மட்டும் வெற்றி பெறுவது எங்களது நோக்கம் அல்ல. மேலும் இந்திய அணியும் நாங்கள் போட்டியுள்ள அனைத்து அணியையும் வீழ்த்தி வெற்றி வெற்றி பெற விரும்புகிறோம். அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். எவ்வாறு பாகிஸ்தான் அணையின் கேப்டன் கூறினார்.