செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வுக்காக திமுகவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்களா ?  சொல்லுங்க பார்க்கலாம்…. இதே காவிரி நதி நீர் பிரச்சனை வந்ததுங்க. நாங்க கூட்டணியில இடம் பெற்றிருந்தோம். நேற்றைய தினமே ஊடகத்திலும் – பத்திரிக்கையிலும் வந்தது. 22 நாட்கள் தமிழ்நாட்டு மக்களின் உரிமையைக் கேட்க… ,  டெல்டா பாசன விவசாயிகள் 20 மாவட்ட மக்களுக்கு காவிரி நதி நீர் குடிநீர் ஆதாரமா விளங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த உரிமையை பெறுவதற்கு 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவிற்கு, எங்கள் நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  செயல்பட்டார்கள். இன்றைய தினம் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் குறிப்பிட்டீங்க…  திரு. ஸ்டாலின் குறிப்பிட்டார், உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று….

நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, உங்களுக்கு தான் எதிர்க்கட்சி எல்லாம் ஒன்றா இருக்குதுல்ல. ஒட்டுமொத்தமா குரல் கொடுத்து,  நீட் தேர்வை ரத்து செய்ய என்ன முயற்சி எடுத்தீர்கள் ? ஒரு நாளாவது குரல் கொடுத்து அவையை ஒத்தி வைக்க முடிந்ததா?  தில்லு – திராணி வேணுங்க, அதுக்குன்னு..  ஒரு இதெல்லாம் ஏமாற்று வேலை…

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர துடிக்கிறவங்க. மக்களை பற்றி கவலை இல்ல. ஓட்டு போட்ட மக்களை பற்றியும் கவலை இல்ல. நாட்டு மக்களை பற்றியும் கவலை இல்லை. நாட்டைப் பற்றியும் கவலை இல்லை. குடும்ப ஆட்சி. குடும்பம் தான் கண்ணுக்கு தெரியுது. குடும்பம்  ஆட்சிக்கு வரணும்…  ஆட்சி அதிகாரத்தில் இருக்கணும். இதுதான் திரு ஸ்டாலினுடைய நினைப்பு என தெரிவித்தார்.