
மலையாள நடிகர் பகத் பாசில் நடிப்பில் கடந்தாண்டு வெளியான “ஆவேசம்” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மிதுூட்டி. இவர் instagram மூலம் பிரபலமானவர்.
இவர் ஆவேசம் படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரை உலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் தற்போது பார்வதி (23) என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் 32 வயதாகும் மிதுட்டி தன்னைவிட ஒன்பது வயது சிறிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு ஆளானார்.
இதுகுறித்து அவர் தற்போது கூறியதாவது, “எங்கள் இருவருக்கும் 9 வயது வித்தியாசம் உள்ளது. எனக்கு 32 வயது.என்னுடைய மனைவிக்கு 23 வயது. ஆனால் அது எங்களுக்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை.
எங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நன்றாகவும் இருக்கிறது. எப்போதும் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறோம். மற்றவர்கள் கூறுவதை நான் கவனிப்பதில்லை. பேசுகிறவர்கள் பேசட்டும் நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒன்றாக சேர்ந்து வாழ போவது நாங்கள் தான்”என பதிலளித்துள்ளார்.