திரைப்படங்கள் திருட்டை தடுப்பதற்கு மத்திய அரசு ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தத்தை சமீபத்தில் செய்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. அதன்படி, அனுமதியின்றி படப்பிடிப்பின் பொழுது வீடியோ எடுக்கவோ அல்லது அதை ஒளிபரப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் போடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஏனெனில் திரைப்பட திருட்டுச் செயலில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறையும், பெரும் அபராதமும் விதிக்கப்படும் எ ன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், இதனை ஸ்டேட்டஸ் ஆக வைக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.