தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் தற்போது இந்தி திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் உடன் “வார் 2” என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. அந்த டீசரில் ஆக்சன் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் இடையே நடைபெறும் மோதல் காட்சிகள் அருமையாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் இன் முதல் பாலிவுட் மூவி என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.