இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். சர்வதேச செஸ் போட்டிகளில் ஏராளமான வெற்றிகளை புரிந்து உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கும்படி வைத்துள்ளவர்.

இன்றைய தலைமுறையினருக்கும் முன்னுதாரமாகவும் திகழ்கிறார். விஸ்வநாதன் ஆனந்த் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான தகவலை குறித்து பேசி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :-
நான் ஒரு பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரளாவிற்கு ரயிலில் சென்றேன். அப்போது எனக்கு அருகே பெரியவர் அமர்ந்திருந்தார்.

அவர் என்னிடம் நீ என்ன பண்ணுற? என்று கேட்டார். நான் செஸ் விளையாடுகிறேன் என்று கூறிய போது நீ படிக்கிறாயா? என்று என்னிடம் கேட்டார். அதற்கு ஆமாம் நான் படித்துக் கொண்டே விளையாடுகிறேன் என்று கூறினேன்.

அதற்கு அந்தப் பெரியவர் நீ தவறாக எடுத்துக் கொள்ளாதே ஒருவேளை நீ விசுவநாதன் ஆனந்தாக இருந்தால் செஸ் விளையாடலாம் மற்றபடி பெரிய ரிஸ்க்கெல்லாம் எடுக்காதே என்றார்.

உன்னுடைய எதிர்காலத்தில் நீ ரொம்ப கஷ்டப்படுவாய் என்பதற்காக தான் இப்படி அக்கறையாக கூறுவதாக அவர் கூறினார். அந்தப் பெரியவர் கூறிய விஷயம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எனவே அந்த பெரியவரிடம் நான்தான் விஸ்வநாதன் ஆனந்த் என்று அவரிடம் சொல்லவில்லை என்று கூறினார்.

“>