இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராத் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில், பல முன்னணி வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, சிங்கத்தை போன்ற பேரார்வம் கொண்ட ஒரு மனிதன். உங்களை மிஸ் பண்ணுவேன் சீக்ஸ் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோலியின் தலைமையின் கீழ் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தது. மேலும் கடந்த 2018 முதல் 19 வரை நடைபெற்ற சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் முதல் தொடரையும் வென்றது குறிப்பிடத்தக்கது.