விநாயகர் சதுர்த்தி விழா: தமிழக காவல்துறை கட்டுப்பாடு!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டுகளை தமிழக காவல்துறை  வெளியிட்டது.

களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. வேற்று மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் அருகே விநாயகர் சிலைகள் நிறுவக்கூடாது. விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் 24 மணி நேரமும் விழா ஏற்பாட்டாளர்கள் இருக்க வேண்டும்.  அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் ஊர்வலத்தை நடத்த வேண்டும்.  பட்டாசு வெடிக்கக் கூடாது என தமிழக காவல்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

 

 

Leave a Reply