
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நாசர். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் கூறியதாவது, என் மூத்த மகன் ஃபைசல் தீவிர விஜய் ரசிகன். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து 14 நாட்கள் கோமாவில் இருந்தார். கோமாவில் இருந்து மீண்டதும், அவர் அம்மா, அப்பா என்று கூறவில்லை. அவர் சொன்ன ஒரே வார்த்தை விஜய். அவருக்கு விஜய் என்ற ஒரு நண்பன் இருக்கிறார்.

அவரை தான் அழைக்கிறார் என்று நினைத்து அவரை தொடர்பு கொண்டு வரவழைத்தோம். அப்போது அவர் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. என் மனைவி விஜய்யின் புகைப்படத்தை காட்டிய போது, அவரது முகம் மலர்ந்தது. இதனால் அடிக்கடி அவருக்கு விஜயின் படம், பாடல் அவர் பேசிய பேச்சு என அனைத்தையும் போட்டுக் காட்டினோம். அதன் பின்னர் தான் அவர் முழுமையாக நினைவு திரும்பினார். என் மகனின் நிலையை அறிந்த விஜய் அவர் குணமாக்கும் வரை அவரிடம் வந்து பேசிவிட்டு சென்றார் என்று கூறினார்.