விஜய் அவர்கள் ஆபாசமாக திரையில் பேசுவது நல்ல  செயல் அல்ல என பிரபல தொகுப்பாளர் பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

அக்டோபர் 19 வெளியாக  உள்ள லியோ திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து, அதில் தளபதி விஜய் அவர்கள் ஆபாசமாக பேசும் வசனம் குறித்து பிரபலங்கள் பலரும்,  சினிமா விமர்சகர்கள் சிலரும் விஜய் இப்படி பேசியது தவறான ஒன்று எனவும்,  U/A  சான்றிதழ் வாங்கிய லியோ திரைப்படம் திரைக்கு வரும்போது  இதுபோன்ற வசனங்களை பீப் செய்து விடுவார்கள்.  ஆனால் ட்ரெய்லரில் அதை அப்படியே வெளியிட்டதற்கான காரணம் என்ன ? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  அந்த வகையில்,

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் தொகுப்பாளர் ஆவுடையப்பன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “இது வேண்டாம் விஜய் அண்ணா”  என்ற தலைப்பில் இந்த நிகழ்வு குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.  அதில்,  சினிமாவில் வரக்கூடிய வசனங்கள் அதற்கான சரியான அர்த்தம்  கூட தெரியாத குழந்தைகளிடம் மிக சுலபமாக வலம் வரத் தொடங்கிவிடும்.  சமீபத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் ரஜினி மற்றும் வடிவேல் ஆகியோர் காமெடிக்காக பேசிய இரட்டை அர்த்த வசனம் ஒன்று அதற்கு அர்த்தமே புரியாத குழந்தைகளிடம் சுலபமாக பேசப்பட்டும்,  பகிரப்பட்டும் வருவதை கண்டு அதிர்ந்து போனேன். 

அதை தொடர்ந்து லியோ படத்தில் தளபதி விஜய் அவர்கள் ஆபாசமாக பேசும் அந்த வார்த்தை குழந்தைகளிடம் மிகவும் சாதாரண ஒன்றாக மாறிவிடுமோ என்ற அச்சம் இருப்பதாகவும்,  தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் விஜய் அவர்கள் வெறும் திரை நட்சத்திரமட்டுமல்ல அவர் அதற்கும் மேல்.  அதனால் தான் கூறுகிறோம் இது வேண்டாம் விஜய் அண்ணா என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.