
சர்ச்சைக்குரிய ஜோதிடர் வேணு சுவாமி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே நாக சைதன்யா – சோபிதா பிரிவார்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். காலப்போக்கில் டோலிவுட் நட்சத்திரங்களை பற்றி துணிச்சலாகவும் அதிர்ச்சியூட்டும் கருத்துகளையும் வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமானார். தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது சமூக ஊடகங்களில் அவருடைய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பிரபல தெலுங்கு திரைப்பட நட்சத்திரங்களான பிரபாஸ், விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.
மேலும் ஜோதிட கணக்கின்படி விஜய் தேவரகொண்டா தான் பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் இதுபோன்ற அறிக்கைகள் நட்சத்திரங்களையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் காயப்படுத்த கூடும் என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
మరో వివాదాస్పద వ్యాఖ్యలు వేణు స్వామి
ప్రభాస్ …విజయ్ దేవరకొండ సమంత… వీళ్ళు సూసైడ్ చేసుకోబోతున్నారు #Prabhas #VijayDeverakonda#Samanthapic.twitter.com/6sWan1o7Bn
— Milagro Movies (@MilagroMovies) March 21, 2025