சசிகுமார் நடிப்பு கடைசியாக வெளி வந்த திரைப்படம் நந்தன் . இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது டூரிஸ்ட் பேமிலி என்ற  படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் தொடக்க விழாவானது சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷாந்த் ஜீவிந்த் இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த டீசர்  மிகவும் காமெடியாக அமைந்துள்ளது. சிம்ரன் மற்றும் சசிகுமாரின் குடும்பம் ஒரு இலங்கை சார்ந்த குடும்பமாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.