
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் திருக்கழுக்குன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த சர்புதீன் என்பவரை பட்ட பகலில் 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை கஸ்தூரி ஒரு டுவிட்டர் பதிவை போட்டிருந்தார். அதில் நேர்மையானவர்களின் உயிருக்கு தமிழ்நாட்டில் உத்திரவாதம் கிடையாதா.? எந்த ஜாதி எந்த மதமாக இருந்தாலும் அநியாயத்தை எதிர்த்தால் கேள்வி கேட்டால் போட்டு தள்ளுவதா என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு திமுகவின் ஐடி விங் நிர்வாகி எஸ். தியாகராஜன் பதிலடி கொடுத்தார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் நீங்கள் நேர்மையானவர் கிடையாதா, நீங்கள் நன்றாக தானே இருக்கிறீர்கள். அதிமுகவுக்கு ஓட்டு போட்டு பழகிய குடும்பம் நீங்கள். திமுக அரசு மீது அவதூறு பரப்புவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தியாகராஜன் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி வாங்க செல்லம். என் self goal சிங்கம். நான் வெளியூரில் பத்திரமாக இருக்கிறேன் உங்களுக்கு தெரியாதா. சரி விடுங்க போய் மேட்ச் பாருங்க என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.