இந்தியாவில் வேகமான ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ரூ. 11,360 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தெலுங்கானா சென்றுள்ளார். அங்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்த நிலையில் மாணவர்களுடன் கலந்துரையாடுவார். இதைத்தொடர்ந்து பரேட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். மேலும் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் புறப்படுகிறார்.