கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இதையடுத்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியது. அதில் 124 வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது.
அதன்பின் இரண்டாம் கட்டமாக 42 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. மீதமுள்ள 58 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் இந்த வார இறுதியில் வெளியாகும் என கர்நாடக மாநில காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. கர்நாடகாவில் மே 10 தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத்  தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. முதல்வர் வேட்பாளர் போட்டியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருப்பதாக சொல்லப்படுகிறது. தங்கள் உறவு சுமூகமாக செல்கிறது என இருதரப்பும் கூறினாலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூற மறுக்கின்றனர்.