இந்தியாவில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களால் விமான டிக்கெட்டுகளின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை முதல் பெங்களூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லலாம். அதோடு விமானத்தில் கிடைப்பது போன்ற சலுகைகளும் வந்தே பாரத் ரயில் சேவையில் கிடைக்கிறது.

அதன் பிறகு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஏசி சேர் கார் கட்டணமாக 995 ரூபாயும், எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணமாக 1885 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது விமான நிறுவனங்கள் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்கு விமான டிக்கெட்டின் விலை 900 முதல் 2000 ரூபாய் வரை குறைந்துள்ளது. விமானத்தில் பயணிகளை கவருவதற்காக ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலையை குறைப்பதற்கு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.