
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. செல்போனில் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் மோசடி நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும் மோசடிகளில், மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்ச கணக்கில் பணங்களை பறித்து செல்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை குறி வைத்து அமேசான் வாடிக்கையாளர்கள் என்று கூறி ஆந்திராவில் இருந்து ஒரு கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து தகவல் அறியும் காவல்துறையினர் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் தகவல்களை திருடி ரூபாய் 20 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் காவல்த்துறையினர் 33 பேரை கைது செய்துள்ளனர்.