நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் யுபிஐ செயலிகளை பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இருந்த இடத்திலிருந்து கொண்டே வேலைகளை எளிதில் முடித்து விட மக்கள் விரும்புவதால் பெரும்பாலும் கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட யுபிஐ செய்திகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் கூகுள் பே மற்றும் போன் பே போன்ற யுபிஐ செயலிகளில் தற்போது வரை பாதுகாப்புக்காக பின் நம்பர்கள் பெறப்படுகின்றன.

அதனை மாற்றி பயோமெட்ரிக் முறைகளை பயன்படுத்த NPCI முடிவு செய்துள்ளது. இதற்காக சில தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையும் தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் விரல் ரேகை, கண் கருவிழி மற்றும் முகம் ஆகியவற்றைக் கொண்டு உங்களால் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்ய இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.