நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பிரகாசமான எதிர்காலம் தெரிகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் 20 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 32,200 கோடி முதலீட்டில் விவசாயத் துறைக்கு புதிய நிதியம் உருவாக்கப்படும். தோட்டக்கலைத்துறைக்கு ச2,200 கோடி ஒதுக்கப்படும். தினை உணவு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலையில் உள்ளது. அதனை உலகத்தின் மையமாக உயர்த்துவதே அரசின் குறிக்கோள் என்றார்.