தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 18ஆம் தேதி நவம்பர் மாதம் தெய்வானை யானை உணவளிக்க சென்ற யானைப்பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி எறிந்தது. இதனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசின் பொது நிவாரண நிதியாக தலா ரூபாய் 2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாவது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் யானை திமிரி அருகில் இருந்த பாகன் உட்பட அவரது உறவினரை தூக்கி எரிந்ததில் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிசுபாலன் மற்றும் உதயகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். என்று தெரிவித்திருந்தார்.