
சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கை ஏற்படுத்ததும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆன்மீக சொற்பொழிவாளரான மகாவிஷ்ணு என்பவர் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது மகா விஷ்ணு மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலும் பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பாக பேசியதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம் என அவர் பேசியிருந்தார். அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்மீகத்திற்கு இடமில்லை என்று ஆசிரியர் கேள்வி எழுப்பினார். அதற்கு மகா விஷ்ணு ஆன்மீகம், மறுபிறவி, பாவ புண்ணியம் ஆகியவை பற்றி பேசினார். மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியதால் ஊடகங்களில் அந்த வீடியோவை வைரலானது.
இதனால் பலரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் ட்விட்டரில் தொடர்ந்து #Resign_AnbilMahesh என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. திமுகவினரே அமைச்சரை விமர்சித்து வருகின்றனர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. முன்னதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தை இனி இதுபோன்று நடைபெறாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.