ஏப்ரல் 1-ஆம் தேதி பழைய முறையில் இருந்த அனைத்து சரிபார்க்கப்பட்ட கணக்குகளையும் முடக்குவதாக டுவிட்டர் முன்னதாக அறிவித்து இருந்தது. மேலும் டுவிட்டர் புளூ சந்தாவிற்கு பணம் செலுத்தாமல் இருக்கும் கணக்குகளையும் முடுக்குவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் “Twitter Verified” கணக்கு சுமார் 4,20,000 கணக்குகளை பின் தொடர்வதை நிறுத்தி இருக்கிறது. இதன் காரணமாக “Twitter Verified” அவர்களை பின்தொடர்கிறதா? இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை.

முன்னதாக எலான் மஸ்க் twitter-ல் லோகோவாக இருந்த நாய்க்கு பதில் மீண்டும் குருவியை மாற்றி உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் குருவி லோகோவை தூக்கிவிட்டு, நாய் லோகோவை வைத்தார். இந்த நாய் படம் டோஜ்காயின் எனும் கிரிப்டோவின் லோகோவாகும். மஸ்க் இதை டுவிட்டரில் பயன்படுத்தியவுடன் டோஜ்காயின் மதிப்பு 24 சதவீதம் வரை உயர்ந்தது. கிரிப்டோ தொடர்பான லோகோவுக்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், மீண்டும் குருவி லோகோ மாற்றப்பட்டது.