உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ட்விட்டர் பயனர்கள் தங்களுடைய டுவிட்களுக்கு வருவாயீட்டும் புதிய திட்டம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது ட்விட்டர் பயனர்கள் வருமானம் ஈட்டும் விதமாக புதிய வருவாய் திட்டம், நிதி நிறுவனமான ஸ்ட்ரைப் பே அவுட் சப்போர்ட் கொண்ட அனைத்து நாடுகளிலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்திய பயனர்கள் யாரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியாது. இந்த விளம்பர வருவாய் பங்கீடு திட்டத்தில் பயன்பெற விரும்பினால் நிச்சயமாக ட்விட்டர் ப்ளூ சந்தாவில் இணைந்து இருக்க அல்லது வெரிஃபைட் நிறுவனங்களாக இருக்க வேண்டும். அதேசமயம் கடந்த மூன்று மாதங்களில் தங்களின் ட்விட்டர் பதிவுக்கு சுமார் 50 லட்சம் பார்வையாளர்களை யாவது பெற்று இருக்க வேண்டும். அதேசமயம் ட்விட்டரின் கிரியேட்டர் மானிட்டைசேஷன் தர கட்டுப்பாடுகளையும் பயனர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.