அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நிலை குலைந்துள்ள துருக்கி மற்றும் சிரியாவில் பலியானோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துவிட்டது. துருக்கி சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்கள் கடந்து விட்டன. இடிந்து விழுந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் சிக்கி தவிப்பவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி இன்னும் முடியவில்லை. கட்டிட இடிபாடுகளில் மாட்டிக் கொண்டு இறந்தவர்களின் சடலங்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்து 13 நாட்களை கடந்து விட்டதால் சடலங்கள் அழுக தொடங்கிவிட்டன. அதனால் சடலங்களை தோண்டி எடுக்க கூடுதல் நேரம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்களுக்குப் பிறகு இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.