வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.

மேலும் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பகிரங்கமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையிலிருந்து ஒக்கைடா மாகாணத்தில் மேற்கு ஒஷிமா தீவு அருகே விழுந்ததாக தெரிவித்துள்ளார்.