இந்தியாவின் வடகிழக்கு இமய மலைத் தொடரில் அமைந்துள்ள மாநிலம் சிக்கிம். இங்கு வடக்கு சிக்கிமில் உள்ள ஒரு கிராமத்தில் டென்மார்க் பகுதியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். அப்போது யும்தாங்க் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா மேற்கொண்ட அவர்கள் அங்கு சாலையோரம் கிடந்த குப்பைகளை ஒரு பெரிய பையில் சேகரித்து அப்புறப்படுத்தினர்.

இதனை ஒருவர் வீடியோவாக இணையதளத்தில் வெளியிட்டு கிராம மக்கள் கண்டு கொள்ளாத போதும் வெளிநாட்டு பயணிகள் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்கின்றனர் என பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sikkim Diaries Tours & Travels | Sikkim, India (@sikkimdiariescom)