புதுச்சேரியில் தற்போது பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலத்திற்கு பாரம்பரிய விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் பாராம்பரிய விழாவின் முதல் நிகழ்ச்சி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதியவர்கள் பழமையான விளையாட்டுகளை சிறுவர்களுக்கு கற்றுக் கொடுத்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாண்டி விளையாட்டு, சில்லு விளையாட்டு, பல்லாங்குழி, கோலி, சுரங்கக்காய் விளையாட்டு, உடைந்த வளையல் விளையாட்டு, ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்ததாம் விளையாட்டு, எட்டாம் கோடு, கொல கொலையா முந்திரிக்கா, கண்கட்டி விளையாட்டு, தட்டாங்கல், சுட்டிக்கல், பம்பரம் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர் ‌