உலக அளவில் முதல் நாள் மட்டும் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் .
லியோ:
முதலாவதாக விஜய் திரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல் நாளில் உலக அளவில் 178 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ஜெயிலர்:
அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 95 கோடிக்கு மேல் வசூலித்தது.

பொன்னியின் செல்வன்:
விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வரலாற்று திரைப்படமாக உருவான பொன்னியின் செல்வன் படம் முதல் நாளில் உலக அளவில் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

வாரிசு:
விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 47 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

துணிவு:
வினோத் இயக்கத்தில் அஜித்குமார், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, பவானி ரெட்டி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான துணிவு படம் உலக அளவில் முதல் நாளில் 42 கோடிக்கு மேல் வசூலித்தது.

மாவீரன்:
சிவகார்த்திகேயன், அதிதி, மிஷ்கின் நடிப்பில் வெளியான மாவீரன் படம் உலக அளவில் முதல் நாளில் 15 கோடி ரூபாய் வசூலித்தது.

மாமன்னன்:

மாரி செல்வராஜின் எழுத்து, இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 14 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

மார்க் ஆண்டனி:
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், ரிது வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வ ராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 12 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து நல்ல வரவேற்பை பெற்றது.

வாத்தி:
தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் முதல் நாளில் 12 கோடிக்கு மேல் வசூலித்தது.

பத்து தல:
சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன் ஆகியோர் நடித்த பத்து தல படம் முதல் நாளில் உலக அளவில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.