திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இப்போ சிஏஜி அறிக்கை. அது என்ன நம்முடைய அமைப்பா அது ? சிஏஜி என்றால் என்ன ? கண்ட்ரோலர் ஆடிட் ஜெனரல் ஆப் இந்தியா. இவங்களுடைய பணி மத்திய – மாநில அரசுகள் உடைய நிதி சுமையை தணிக்கை செய்வது. அறிக்கை வெளியிட்டு இருக்காங்க. ஒன்பது ஊழல் வெளியே வந்திருக்கு. ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல்.துவாரகா விரைவு சாலை அப்படின்னு ஒரு திட்டம். அதுல ஒரு கிலோ மீட்டர் ரோடு போடறதுக்கு எவ்வளவு தெரியுமா செலவு கணக்கு காட்டி இருக்காங்க…

ஒரு கிலோமீட்டர் ரோடு போடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு. நான் சொல்லலைங்க சிஏஜி ரிப்போர்ட் சொல்லுது.. கிலோமீட்டருக்கு 18 கோடி அனுமதி கொடுத்து, அதை சிக்ஸ்வே.. ஆறு வழி சாலை என மாற்றி காட்டி, கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரோடு போட்டதற்கு செலவு செஞ்சு இருக்குது இந்த ஒன்றிய பாஜக அரசு.

”ஆயுஷ்மான் பாரத்” அப்படின்னு ஒரு திட்டம். சில வருடங்கள் முன்பு ”ரமணா” என ஒரு படம் வந்தது. நீங்க பார்த்திருப்பீங்க… அதுல ஒரு காட்சி வரும். இறந்து போன ஒருத்தரை ஆஸ்பத்திரிக்குள்ள அடைச்சு வச்சு… அவர்களுடைய உறவினர்கிட்ட, உள்ள நல்லா இருக்காரு. ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கோம். இந்த மாத்திரை எல்லாம் வாங்கிட்டு வாங்க.  ஆபரேஷன் எல்லாம் பண்ணா காப்பாத்திடலாம்னு பொய் சொல்லி இறந்து போன ஒருவருடைய உறவினர்கிட்ட கொள்ளையடிச்சிட்டு இருப்பாங்க.

படத்துல வந்த அந்த காட்சியை ஒன்றிய பாஜக நிஜத்தில் செஞ்சு காட்டி இருக்கு. ஆயுஷ்மான் பாரத் என்று ஒரு மருத்துவ காப்பீடு திட்டம். இதுல  இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் கொடுத்து இருக்காங்க. இறந்தே போயாச்சு.. இறந்து போன பிறகு 88 ஆயிரம் பேருக்கு இன்சூரன்ஸ் காப்பீடு திட்டம் என பேசினார்.