
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப்பணி, பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும் நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் 6244 பணியிடங்கள் உள்ளது. இதன் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு எழுத செல்லும் நபர்கள் பின்பற்ற வேண்டிய கடைசி டிப்ஸ் பற்றி பார்ப்போம். முதலாவதாக ஹால் டிக்கெட் நகலை எடுத்து வைக்க வேண்டும். அடுத்ததாக கருப்பு நிற பந்து முனை பேனா, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அல்லது ஓட்டர் ஐடி ஆகியவற்றை மறக்காமல் எடுத்து வைக்க வேண்டும். முன்கூட்டியே இவற்றை எடுத்து வைத்து விட்டால் பதற்றம் இல்லாமல் தேர்வை நல்ல மனநிலையில் எழுதலாம்.