தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் அனைத்தும் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக நிரப்பப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 1021 மருத்துவ பணியிடங்களுக்கான எம்ஆர்பி கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த நிலையில் 25,000 மேற்பட்ட மருத்துவர்கள் இந்த மருத்துவ பணியாளர் தகுதி தேர்வு எழுதினார்.

இந்நிலையில் இந்த தகுதி தேர்வுக்கான முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கூடிய விரைவில் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 1021காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தற்போது எம்ஆர்பி தேர்வு மூலமாக 1021 மருத்துவர்களும் நேரடியாக நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.