மின்கட்டணம் செலுத்த கோரி சந்தேகிக்கும்படி குறுஞ்செய்தி வந்தால் அதை தவிர்த்து விட கோரி பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் கட்டணத்தை செலுத்த கோரி பயனாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அதன் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் மோசடி சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வந்த நிலையில், அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாப்பதற்கான அறிவுரையை தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது வழங்கியுள்ளது.  அதில்

மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும் என்பது போன்ற குறுஞ்செய்தியோ அல்லது மர்ம நபர்களிடமிருந்து அழைப்புகளோ வந்தால் அதை கண்டு கொள்ளாமல் மக்கள் தவிர்த்து விட வேண்டும் மீறி குறுஞ்செய்தியில் இருக்கக்கூடிய இணைப்புகளை தொட்டாலோ அல்லது அவர்கள் தொடரக்கூடிய  அழைப்புகளில் தொடர்ந்து பேசி வந்தாலோ ஃபிஷிங் முறை மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடு போவதற்கான வாய்ப்பு ஏராளம் உண்டு என எச்சரித்து உள்ளது. மேலும் இது போன்ற சந்தேகிக்கும்படியான குறுஞ்செய்தி ஏதேனும் மேற்கண்ட படி மொபைலுக்கு வந்தால், 1930 என்ற எண்ணிற்கு  அழைத்து இது குறித்து உடனடியாக புகார் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.