ஹிமாசல் பிரதேசத்தில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த போலந்து நாட்டைச் சேர்ந்த பயணி காஷியா, சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சிக்கரமான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வில், தன்னைப் புகைப்படம் எடுக்கக் கோரிய இந்தியர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தன்னிடம் பலமுறை “புகைப்படம் எடுக்கலாமா” எனக் கேட்ட அந்த நபரை, மறுப்புத் தெரிவித்த பிறகும் அவர் தொடர்ந்து பின்தொடர்ந்ததால், அதிர்ச்சியடைந்த காஷியா அதைப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/reel/DJWgAi_SOCP/?igsh=ODdncmUxYjl0cWZ2

இந்தத் தகாத நடத்தை நடக்கும் போதே, நான் வீடியோ எடுத்தேன். அதைப் பார்த்த அந்த நபர் பின்னால் தொடர்வதை நிறுத்தினார்,” எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் ஹிந்தியில் சத்தமாக கூச்சலிட்டதாகவும், இதனால் தான் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, காஷியா பின்னர் ஒரு தனிப் பதிவில் விளக்கமளித்துள்ளார். “இந்தியாவை குறை சொல்லுவதற்கோ, இந்திய மக்களைப் பழி கூறுவதற்கோ நான் இதை பகிரவில்லை. உலகின் எந்த நாட்டிலும் இந்த மாதிரியான நடைமுறைகள் தவறானவை. இந்த வீடியோவின் நோக்கம், ஆண்கள் என்ன செய்யக்கூடாது என்பதை உணர்த்தவே,” எனக் கூறியுள்ளார்.

மேலும், இந்த அனுபவம் தன்னுடைய தனிப்பட்ட பயணத்தை நிறுத்த வைக்காது என்றும், “இந்தியா ஆரம்பநிலையிலிருக்கும் பயணிகளுக்கான இடமல்ல” என்பதும் சரியான பழமொழி என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், வெளிநாட்டு பெண்கள் இந்தியாவில் சந்திக்கும் அனுபவங்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.