நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, 3 விஷயங்களில் கவனம் செலுத்தி உழைத்தேன்; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலே நாட்டில் ஏழ்மையையும் – ஏழை மக்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.  காங்கிரஸ்னுடைய ஆட்சி காலத்தில் நாட்டை பாலாக்கி இருக்கிறார்கள்.  பொருளாதார நிலைமையில் 12 – 13 என்ற இடங்களில் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.

ஆனால் 2014 பிறகு இப்போது இந்தியா முதல் 5 நாடுகளில் ஒரு நாடாக வந்திருக்கிறது. ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. காங்கிரஸ் இருக்கு  மக்களுக்கு தோன்றலாம்…  இது ஏதோ, ஒரு மந்திர மாயாஜாலமாக செய்திருக்கிறார் என்று ? ஆனால் இந்த அவைக்கு நான் சொல்ல விரும்புகின்றேன். ‘Reform, Perform, Transform ( சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ) என்ற மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினேன். கடுமையாக உழைத்தேன்.

உழைப்பின் மீது அவ்வளவு நம்பிக்கை.  இதன் காரணமாகத்தான் இன்று நாடு இந்த நிலையை எட்டி இருக்கிறது. இந்த திட்டமும் – செயலாக்கமும் தொடர்ந்து நடக்கும். மேலும் மேலும் சீர்திருத்தங்கள் நடக்கும். செயல்பாட்டுக்காக எல்லா வலிமையும் செலுத்தப்படும். அதனால் நாங்கள் மூன்றாவது இடத்திற்கு வந்தே தீருவோம்.

மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  தேசத்தின் நம்பிக்கை.  நான் மீண்டும் ஒருமுறை சொல்ல விரும்புகிறேன். 2028 ல் நீங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டு வரும்போது,  நாடு பொருளாதார நிலையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையை நான் உங்களுக்கு தருகிறேன்.மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  நம்முடைய எதிரியில் இருப்பவர்களுடைய மனதிலே நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.