மகாராஷ்டிராவில் ஒரு ஜோடி  காதலித்து வந்தனர். பின்னர்  இருவரும் 2019ல் திருமணம் செய்துகொண்டனர். இவ்வாறு நகர்ந்த இவர்களின் மணவாழ்க்கை திடீரென விரிசல் ஏற்பட துவங்கியது.   காரணம்;  கணவர் வேலையில்லாதவராகவும், போதைக்கு அடிமையாகவும் இருந்ததுள்ளார் அதுமட்டுமின்றி , பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

கணவனின் இவ்வகையான நடத்தையை அறிந்ததும், மனைவி விவாகரத்து கோரி, தாய் வீட்டிற்கு சென்று வசிக்கத் தொடங்கினார். கடந்த 3 மாதங்களாக தாயுடன் தங்கியிருந்த இந்த பெண்ணிடம் கணவர் மீண்டும்தன்னுடன் சேர்ந்து வாழுமாறு அழைத்துள்ளார்  மறுப்பு தெரிவித்து மனைவி கணவருடன் செல்ல மறுத்துள்ளார். இதில் கோபமடைந்த கணவன் புதன்கிழமை அன்று மனைவியை மீது ஆத்திரத்தில்  ஆசிட் வீச முயன்றுள்ளார். அதிஷ்டவசமாக அந்த பெண் உயிர் தப்பினர்.

ஆசிட் வீசி கணவனை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது