நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கிறார். இவரது நடிப்பில் நேற்று “கேங்கர்ஸ்” என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வடிவேலு, மறைந்த நடிகர் விவேக்கின் மறைவின்போது ஏன் போகவில்லை என்பதை குறித்து பேசி உள்ளார். அவரது இறப்பு தாங்க முடியாத வலி. அவரது இறப்புக்கு நான்  போகவில்லை என்று நிறைய பேர் சொன்னாங்க.

ஆனால் அவரது வீட்டுக்கு எல்லாம் சென்றுஅவரது மனைவி, குழந்தைகள் அனைவரிடமும் துக்கம் விசாரித்தேன். அவர் இறப்பார் என நான் நினைக்கவே இல்ல. அந்த காலகட்டத்தில் நானும் ரொம்ப மோசமாக தான் இருந்தேன். எங்க வீட்டிலேயே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு பயந்துட்டு இருந்தாங்க. அதனால் தான் போகவில்லை என பதிலளித்து தனது மனதில் இருந்த மொத்த பாரத்தையும் இறக்கி வைத்தார்.