
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த சந்திப்பில் துணை முதலமைச்சர் கூறியதாவது,”ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் கட்சி என்றால் கூச்சல், குழப்பம் என்றுதான் அர்த்தம். சட்டமன்றத்தில் எங்களது ஜனசேனா கட்சிக்கு 2ஆவது இடமும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 3ஆவது இடத்தையும் மக்கள் அளித்துள்ளனர். இதுதான் தற்போது அவர்களுக்கு பிரச்சனை.
ஆனால் 11 இடங்கள்தான் பெற்று இருக்கிறோம் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆட்சி அமைந்திருந்தால் அவர்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்பதல்ல. வாக்குகளின் அடிப்படையில் தான் அந்தஸ்த்து கொடுக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் அதற்கு ஜெர்மனிக்கு தான் செல்ல வேண்டும்.
அங்குதான் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அந்தஸ்து வழங்கப்படும். நமது நாட்டில் அதற்கு அனுமதி இல்லை. இந்தியாவில் வக்பு வாரியம் என்ற ஒன்றை இருந்தால் சனாதன தர்மம் பாதுகாப்பு போர்டு ஏன் இருக்கக் கூடாது? இவ்வாறு பவன் கல்யாண் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.