அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா  பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தில சில திட்டங்களை கிடப்பில்  போட்டு இருக்காங்க. வீராணம் முதல் தெற்குகாவல குறிச்சி வரை சுமார் 6  கிலோமீட்டர் கால்வாய் பணி அமைக்க ஆரம்பப் பணிகள் நிறைவடைந்த நிலையில் விடியா திமுக அரசு இத்திட்டதினை ரத்து செய்துவிட்டது, இதுதான் இந்த ஆட்சியினுடைய சாதனை.

தென்காசி மாவட்ட விவசாயிகள் 48 ஆண்டு கால கனவான ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிக்கு 41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு,  15 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள். அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வந்து திட்டம் என்பதற்காக கிடப்பில் போட்டு விட்டாங்க.

7 லட்சம் மதிப்பில் இரட்டை குழல் முதல் ஊத்துமலை வரை கால்வாய் அமைக்க ஆய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் விடியா  திமுக அரசு,  அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக ரத்து செய்து விட்டார்கள். ரூபாய் 1.30 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் சங்கரன்கோவில் நகரில் அமைக்கப்பட்டது. தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை, இதுதான் அவர்கள் சாதனை.

சங்கரன்கோவில் நகரில் அரசு கலைக்கல்லூரி 8.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதுவரை திறக்கப்படவில்லை,  பயன்பாட்டிற்கு வரவில்லை. திருவேங்கட வட்டாட்சியர் அலுவலகம் ரூபாய் 2.60   மதிப்பீட்டில் கட்டப்பட்டு தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை.  சின்னகோவில் குளத்தில் ஆட்டின் ஆராய்ச்சி மையம் 2.70 மதிப்பீட்டில் நிறைவேற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போதுள்ள விடியா  அந்த  நிதியை குறைத்து தரமற்ற முறையில் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. அதேபோல அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை எல்லாம் அப்படியே ரத்து பண்ணிட்டாங்க,  கை கழுவிட்டாங்க என வேதனையோடு தெரிவித்தார்.