
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் நிலையில் நேற்றைய படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்களை பேசினார்.
அவர் பேசியதாவது, ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால் அடுத்த வெற்றி கொடுக்கும் வரை தூக்கம் இருக்காது. இது சகுனிகள் அதிகம் வாழும் சமூகம் இது. இங்கு நியாயவாதியாக இருந்தால் மட்டும் பிழைக்க முடியாது. சாணக்கியதனமும் சாமர்த்தியமும் நிச்சயம் தேவை. இந்த இரண்டு இருந்தால் மட்டும்தான் பிழைக்க முடியும் என்று கூறினார். மேலும் கையில் காசு கூட இல்லாமல் தமிழகத்திற்கு வந்த என்னை ஏற்றி விட்டது தமிழக ரசிகர்கள் தான் என்று கூறினார்.