
பஞ்சாப் மாநிலத்தில் தணிக்கை ஆய்வாளர் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி பணியினை தணிக்கை செய்ய லஞ்சம் கேட்டதாக குற்றம் சட்டப்பட்டுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் தணிக்கை ஆய்வாளர் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கே.பி. பர்திவாலா மற்றும் ஆர் . மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. இந்த விசாரணையில்,”நமது சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும் ஒரு முக்கிய காரணி எதுவென கேட்டால் அது மறுக்க முடியாத ஊழல்தான்.
ஊழல் குறித்த மக்கள் கருத்துக்கள் ஒரு பகுதி உண்மையாக இருந்தாலும், உயர்பதவியில் உள்ள அதிகாரிகள் எந்தவித தண்டனையும் பெறாமல் பரவலாக செய்யும் ஊழல் தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறது “என தெரிவித்தனர். மேலும் அரசு துறை மற்றும் அரசியல் கட்சிகளின் உயர் பதவிகளில் உள்ள ஊழல்வாதிகள், கூலிக்கு அமர்த்தபட்ட கொலையாளிகளை விட நமது சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக உள்ளனர்”. இவ்வாறு கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.