அயர்லாந்து நாட்டில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வாலிபர் 2 பெண்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தமீர் ஓஹயோன் என்பவர் அயர்லாந்து நாட்டிற்கு வணிக சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார். அவர் அங்குள்ள Hardy’s Bar என்ற இடத்தில் அமர்ந்திருந்த போது அங்கு சென்ற 2 பெண்கள் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அதாவது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அயர்லாந்தில் இடம் கொடுக்க முடியாது என்று அவர்கள் கூறியதோடு தகாத வார்த்தைகளால் திட்டினர்.

அதோடு அந்த பெண்களில் ஒருவர் வாலிபர் மீது எச்சில் துப்பியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வாலிபர் புகார் கொடுத்துள்ள நிலையில் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று கூறியுள்ளார். மேலும் இந்த தாக்குதலை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததோடு வீடியோவும் எடுத்தனர். சம்பவத்திற்கு பிறகு ஹோட்டல் அறைக்கு சென்று அறையை பூட்டிக் கொண்ட வாலிபர் இனி அயர்லாந்து நாட்டிற்கு வரவே மாட்டேன் என்று வேதனை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த இரண்டு மணி நேரம் கழித்து தான் போலீசார் அந்த இடத்திற்கு சென்றதோடு அந்த பிரச்சனை பற்றி அவர்கள் கண்டு கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட வாலிபர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.