செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  பாரதிய ஜனதா கட்சிக்கு நஷ்டம் இல்ல. இருந்தாலும் கூட்டணியில் இருந்து ஒரு நண்பர் போறார். அப்படின்னா….  ஐயோ பாவம் அப்படின்னு சொல்றது,  இயல்புதான். அதனால அந்த மாதிரி நாம அதிமுகவின் வெளியேற்றம்  பற்றி கவலைப்பட வேண்டும்.

கூட்டணி என்கிறது எதுக்காக ? நமக்கு பொது எதிரியின் வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக… அதை தவிர கொள்கை ரீதியாக ஒன்னும் சம்பந்தம் கிடையாது. அதனால பெரிய அளவுல பாரதிய ஜனதா கட்சிக்கு ADMK கூட்டணியில் பார்லிமென்ட் ஒண்ணுமே வரல.  சட்டமன்றத்திலும் சொற்பமான இடங்கள்தான்.  நாலு நாள் ஆஸ்பத்திரில இருந்தேன். என்ன மூச்சி திணறலுக்காக… இனிமே அது இருக்காதுன்னு நினைக்கிறேன்.

You can’t disown your own black marks. நாம என்ன பண்ணலாம் ? கூட்டணில இருக்கார்…  அதனால அதிகம் வலியுறுத்தாமல் இருக்கலாம்.அதனால அண்ணாதுரை ரொம்ப நல்ல வாழ்க்கை வாழ்ந்தவரா ? சொல்லுங்க. அடியே மீனாட்சி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி என சொன்ன ஹிந்து விரோதியில் அண்ணாதுரை முதன்மையானவரா இல்லையா.. ? இது எல்லாம் இருந்தது. ஆனால் நான் ஆரம்பத்துல ஓப்பனா அட்மிட் பண்ணிருக்கேன் என தெரிவித்தார்.

பொலிட்டிகள் அக்ரிகேஷன்க்காக சமயத்துல கூட்டணி அவசியப்படுகிறது. நாம அதனுடைய இம்பார்ட்டண்ஸ் நெக்ளட் பண்ண முடியாது. அதனால இருந்து…. எங்க தாத்தா சொல்லுவாரு…. பொண்டாட்டியா இருந்தாலும்,  அடியே அடியே ஆசையா இருக்குனு சொல்லிட்டு இருக்க முடியுமா ? தினம்தோறும் இதே வேலையா நமக்கு என தெரிவித்தார்.