தமிழக அரசானது இல்லத்தரசிகளுக்காக மாதம் ரூ.1000 உரிமைத்தொகையை கடந்த 15 ஆம் தேதி வழங்கியது. ஏராளமான பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் ஏராளமானவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பணம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் முதியோர் & விதவைகள் உதவித்தொகை போன்ற அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறும் பெண்களுக்கு 1,000 கிடையாது என அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குறைவான ஊதியம் வாங்குபவர்களுக்கு 2 லட்சம் வருமானம் வருகிறது என்று குறுந்தகவல் வருவதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்தால், பரிசீலனை செய்து 1000 வழங்கப்படும். சில குளறுபடிகள் இருக்கிறது அது விரைவில் சரிசெய்யப்படும் என்றார்