திமுக மாநாட்டில் கலைஞரின் பேணா என்ற தலைப்பில் பேசிய கரு. பழனியப்பன்,  கிட்டத்தட்ட 14 வயதில் எழுதத் தொடங்கிய ஒருவர்,  94 வயது வரை எழுதி தீர்ப்பது என்பது இருக்குல்ல,  அது  தமிழ்நாட்டில்…. இந்தியாவில்… உலகத்தில் இப்படி ஒரு தலைவர் கிடையவே கிடையாது. அவ்வளவு எழுதி தள்ளி இருக்காரு. அதுவும் பார்த்தீங்கன்னா…  அவருடைய நாவல்கள், வரலாற்று நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் 75 திரைப்படங்கள்,  இதற்கெல்லாம் மேலாக அவர் ரொம்ப இணக்கமாக மகிழ்ச்சியாக இருந்தது எப்போது  அப்படின்னா…..

அவர் தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு எழுதிய 4,051 கடிதம் எழுதி இருக்காரு. அதற்கு தான் அவர் ரொம்ப பெரிதும் மகிழ்ந்து இருப்பாரு. அது கிட்டத்தட்ட  54 தொகுப்பு.  கலைஞர் அவர்கள்  உடன்பிறப்புக்கு எழுதிய புத்தகங்களை அடுக்கினால்  கலைஞரை விட உயரமாக இருக்கும் அந்த புத்தகம்….  அந்த புத்தகத்தில் தொகுதி 40, 41இல் இதே திமுகவின் உடைய முதல் மாநாடு 2017 இன்றைய முதல்வரும்,

அன்று இளைஞரணி செயலாளருமான ஸ்டாலின் தலைமையில் நெல்லையில் கூடிய  கூட்டத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்பிற்கு கடிதம் எழுதுகின்றார்.  25 கடிதம் எழுதுகிறார்…. அந்த 25 கடிதம் என்ன பேசுது அப்படின்னா….  மொத்தமும் தன் கட்சிக்கு சொல்லும்  முக்கியமான செய்தி என்னன்னா….  இளைஞர்களுக்கு வழி விடுவோம் என்பதுதான் முக்கியமான தலைப்பு. அப்போ இளைஞர்களுக்கு வழி விடுவோம் அப்படின்னா….

இருக்குற சீனியர் எல்லாம் போயிடறதா ? அப்படின்னு ஒரு கேள்வி இருக்கும் அல்லவா….  அது கலைஞர் தனக்கே ஒரு உவமையோடு சொல்லுகிறார். ஒரு தென்னை மரத்தை நட்டு வளக்கிறோம்.  அந்த தென்னை மரம் ஒரு ஆறு மாசம் வளருது.  வளர்ந்த உடனே அதனுடைய மட்டை கீழே விழுந்துருது. தொடர்ச்சியா மரம் வளர வளர அந்த மட்டை ஒரு காலத்தில் உதிர்ந்து,

கீழே விழுந்துருது…  அதுவெல்லாம் இந்த இயக்கத்தின் முன்னோடிகள் போல….  அவர்கள் உலர்ந்தது கீழே விழுந்து விடலாம். ஆனால் பின்னாடி அந்த தென்னை மரத்திற்கு ஏறுவதற்கு அந்த வடுவில் தான் நீ கால் வைத்து மேலே ஏறணும். அதனால முன்னோடிகள் நம்  இயக்கத்திற்கு ரொம்ப முக்கியம்.

ஆக இளைஞர்கள் அந்த வடுவில் கால் வைத்து மேலே  ஏறுவார்கள் அப்படின்னு முடிக்கிறார். அப்படி பிரமாதமான எழுத்தாளராக இருந்த கலைஞர் அவர்கள்….   இந்த இளைஞர்களுக்கு அந்த கடிதம் முழுமைக்கும் என்ன சொல்ல விரும்புகிறார் அப்படின்னா…. எனக்கு பெரிய ஆச்சரியம்,  உலக வரலாற்றில் இருக்கும் அத்தனையும் அந்த 25 கடிதத்திற்குள் அடக்குகிறார் என தெரிவித்தார்.