சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை படைத்தவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட தொடங்கியவர். இதுவரை 123 போட்டிகளில் விளையாடி 9, 230 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். மேலும் 68 டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு, அதில் 40 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது, சர்வதேச போட்டிகளில் விராட் கோலியை அனைவரும் மிஸ் செய்வார்கள். விராட் கோலி நீண்ட காலமாக நம்முடைய கிரிக்கெட் விளையாட்டின் முன்னணியாக இருந்துள்ளார்.

மேலும் டெஸ்ட் போட்டிகள் மீது அவருக்கு இருந்த அன்பும், ஆர்வமும் அளப்பரியது. அனைத்து கேப்டன்களும் விராட் கோலி போன்று ஒரு வீரர் தங்களுடைய அணியில் இருக்க வேண்டும் என விரும்புவர். அவரது இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட்டை விட உலக கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய இழப்பு. டெஸ்ட் கிரிக்கெட் அவரை நிச்சயம் மிஸ் செய்யும் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.