திருநெல்வேலி மாவட்டம் அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த செல்லத்துரை(57) என்பவர் பட்டுக்கோட்டையை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் செல்லதுரை பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டையை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செல்லதுரை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அவரது குடும்பத்தினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.