ஆக்ராவில் உள்ள பட்டேஸ்வர் பகுதியில் மோகினி கோஸ்வாமி என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் அரசு மகளிர் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேர வேலையும் செய்கிறார். அப்படி பகுதி நேர வேலையாக யமுனை ஆற்றங்கரையில் பூக்கள், பூஜை சாமான்கள் விற்பனை செய்ய சென்றுள்ளார். அங்கு யமுனை ஆற்றில் விநாயகரை கரைத்து விட்டு குளிப்பதற்காக நான்கு வாலிபர்கள் ஆற்றில் இறங்கினர். எதிர்பாராத விதமாக நான்கு வாலிபர்களும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனைப் பார்த்த மோகினி துரிதமாக செயல்பட்டு அந்த வாலிபர்களை யமுனை ஆற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளார்.

இச்செய்தி குறித்து அப்பகுதி மக்கள் மோகினியை பெரிதும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து மோகினியின் தாயார் கூறியதாவது, மோகினிக்கு நீச்சல் மிகவும் பிடிக்கும் அவள் இத்தகைய காரியத்தை செய்வார் என எதிர்பார்க்கவில்லை. மகளின் செயலை குறித்து பெருமையாகவும் பிரமிப்பாகவும் உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் மோகினிக்கு தக்க மரியாதையும், சன்மானமும் வழங்க வேண்டும் என பழைய சிவன் கோவிலின் மேனேஜர் தெரிவித்துள்ளார். இச்செய்தி குறித்து அரசு அதிகாரிகள், மக்கள் பலரும் மோகினியை பாராட்டி வருகின்றனர்.