ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அசோக் கெலாட் அரசு பல்வேறு நலத்திட்டங்களை ஒரு பக்கம் அறிவித்தாலும்,  இன்னொரு பக்கம் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்கின்றது. அங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள்….  பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதைத்தவிர பல்வேறு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் லீக் ஆகி,  ”கொஸ்டின் பேப்பர் லீக்” என அது ஒரு பெரும் ஊழலாக உருவெடுத்தது.  பல்வேறு தேர்வுகளில் இது நடைபெற்றதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இப்படி பல்வேறு விதமான காரணங்கள் இருந்தன. அதே சமயத்திலேயே பாரதிய ஜனதா கட்சி நாங்கள் ஊழல் இல்லாத நல்லாட்சியை கொடுப்போம். அசோக் கெலாட் தலைமையிலே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சியாக நடைபெறுகிறது என தெரிவித்தது.

இதை தவிர காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உட்கட்சி பூசல்கள் இருந்தன. சச்சின் பைலட் VS அசோக் கெலாட்  எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி கொண்டார்கள் என்பது நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அசோக் கெலாட்டுக்கு மீண்டும் முதல்வர் பதவி  தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. தனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற வருத்தத்தை சச்சின் பைலட்டுக்கு  அளித்தது. ஆகவே சச்சின் பைலட், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது உயர் சமூகத்தினர் இந்த முறை முழு மனதுடன் காங்கிரசுக்கு ஆதரவளிக்கவில்லை.

இதுவும் தோல்விக்கான ஒரு காரணமாக இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தை  பொறுத்தவரை எல்லாமே மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் பூபேஷ் பாகேல் ஆட்சி அமைத்து விடுவார் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மிகவும் தைரியத்துடன் இருந்தார்கள். ஆனால் அங்கே குஜராத் மாநிலத்திலிருந்து பாஜக,  மத்திய அமைச்சர் மன்சூக் மண்டாவியா அங்கு அனுப்பப்பட்டார். அவர் கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கேயே தங்கி இருந்து,  இரவு – பகலாக உழைத்தார்.

தீபாவளி பண்டிகை கொண்டாட கூட தன்னுடைய சொந்த ஊருக்கு அவர் செல்லவில்லை.  அப்படிப்பட்ட சூழ்நிலையிலே அங்கே மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி,  வளர்ச்சி இல்லை…. வேலை வாய்ப்பு இல்லை…. படிப்புக்கான சூழ்நிலை இல்லை என்ற சூழலை பயன்படுத்திய பாரதிய ஜனதா கட்சி,  நாங்கள்தான் நல்லாட்சியை கொடுப்போம்.

நக்சலைட் பிரச்சனை போன்ற பிரச்சனைகள் நாங்கள் தான் தைரியமாக எதிர்கொள்வோம் என்று வலியுறுத்தி அந்த மாநிலத்திலே தற்போது முன்னிலை பெற்று இருக்கிறார்கள்.  இப்படித்தான் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலே காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிகொடுத்து இருக்கிறது.