கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே பரளி ஆறு செல்கிறது. அங்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது அனைவரும் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட பள்ளமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்தப் பகுதி முழுவதும் பாசிப்படிந்து வழுக்கும் பாறைகள் அதிகமாக உள்ள ஆபத்தான இடம் எனவும், இதே போன்று கடந்த ஆண்டு அதே பகுதியில் பாறையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கால் வழுக்கி ஆற்றில் விழுந்து இறந்துள்ளார் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

அந்தப் பகுதியில் அறிவிப்புப் பலகை எதுவும் வைக்கவில்லை. எனவே கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது நண்பர்களுடன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதால் எச்சரிக்கை பலகைகளை வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.