இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி அதில் உள்ள அனைத்து சமூக ஊடக செயலிகளையும் பயன்படுத்துகின்றனர். அதன்படி அனைவரும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மெட்டா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது பல புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் வரும் வீடியோக்களை நேராக அனிமேஷன் ஸ்டிக்கராக மாற்றி பகிரும் அம்சத்தை மெட்டல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதேபோன்று வாட்ஸ்அப் வீடியோ காலில் மேலும் 6 புதிய எஃபெக்ட்டுகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் சேனலில் போல் ஆப்ஷனுக்கும் இனி புகைப்படத்தை பதிவிட முடியும்.